நீர்ப்பசையே இல்லாத வறண்ட நிலத்தில், முளைத்து விட்ட மரம் தளிர்த்தலும் செழித்தலும் இல்லாது வற்றி காய்ந்து போகும்.
அதுபோல, மனிதனின் உள்ளத்தில் அன்பு இல்லை என்றால் அவனுடைய வாழ்க்கை சிறப்பு அடையாது. அவன் உயிரோடு இருந்தாலும், அவனுடைய வாழ்க்கை பயனற்றது.
அன்புடன் மனிதநேயத்துடன் பலருக்கு உதவியாக இருப்பான். அன்பு இல்லாதவன் பட்டுப்போன மரமே!