தாடி, மீசையுடன் காவி உடை உடுத்தி, துறவியாக காட்டிலோ, மலையிலோ இருந்து தவம் செய்வதனால் பெருமை உண்டாகுமோ?
அப்படியானால் பெருமை தருவது எது?
மற்றவரையும், தன்னைப்போலவே, இல்வாழ்க்கையில் நல்ல வழியில் நடக்கச் செய்து, தானும் இல்வாழ்க்கையை சிறப்பாக நடத்துபவன், துறவியாகி தவம் செய்வோரைக் காட்டிலும் மேலான புகழ் பெறுவான்.