அந்தக் காலத்தில், அரசர்களையும், மடாதிபதிகளையும் பல்லக்கில் அமரச்செய்து ஆட்கள் சுமந்து செல்வது வழக்கமாக இருந்தது.
(இந்தக் காலத்தில் அந்த வழக்கம் அடியோடு ஒழிந்தது)
"இப்படி செய்வது (பல்லக்கில் இருப்பதும் சுமப்பதும்) நல்வினை, தீவினையால் என்றும் நினைக்க வேண்டாம். அத்தகைய ஏற்றத் தாழ்வு, தொழில் தகுதியை காட்டுகிறது."
குறிப்பு: கல் உடைத்தல், மரம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், பாதாளச் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தல் முதலான கடின வேலைகள் யாவும் அவரவர் தொழில் வலிமையை காட்டுகின்றன. மேலும், சுயநலம் குறைந்து, பொதுநலம் கருதி செய்கின்ற தொண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
விதியின் பயன் என்று சொல்லிக்கொண்டிருப்பது பொருத்தமற்றது. அது அறியாமை.