Budi bahasa

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.   ( - 1000) 

Lihat-lah kekayaan di-tangan orang yang biadab: sama-lah ibarat-nya susu yang busok kerana tersimpan di-kendi yang kotor.
Ismail Hussein (Tirukkural)


Tamil (தமிழ்)
பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ் செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல் போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும் (௲)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும். (௲)
— மு. வரதராசன்


நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம். (௲)
— சாலமன் பாப்பையா


பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும் (௲)
— மு. கருணாநிதி


Brāhmī (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀡𑁆𑀧𑀺𑀮𑀸𑀷𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀧𑁂𑁆𑀭𑀼𑀜𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆 𑀦𑀷𑁆𑀧𑀸𑀮𑁆
𑀓𑀮𑀦𑁆𑀢𑀻𑀫𑁃 𑀬𑀸𑀮𑁆𑀢𑀺𑀭𑀺𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁥)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Inggeris (English)
Panpilaan Petra Perunjelvam Nanpaal
Kalandheemai Yaaldhirin Thatru
— (Transliteration)


paṇpilāṉ peṟṟa peruñcelvam naṉpāl
kalantīmai yāltirin taṟṟu.
— (Transliteration)


The great wealth kept by the uncultured Is clean milk gone sour in a can unclean.

Hindi (हिन्दी)
जो है प्राप्त असभ्य को, धन-सम्पत्ति अमेय ।
कलश-दोष से फट गया, शुद्ध दूध सम ज्ञेय ॥ (१०००)


Telugu (తెలుగు)
బుద్ధిహీను నొద్దఁ దద్దయు ధనముంత
మురికి పాత్ర పాలుఁ బోసినట్లు. (౧౦౦౦)


Malayalam (മലയാളം)
ദുർജ്ജനത്തിൻ ധനം ലോകർക്കൊരുനാളും ഗുണം തരാ ഭാജനം ശുദ്ധമല്ലാഞ്ഞാൽ നല്ലപാൽ കെട്ടുപോയിടും (൲)

Kannada (ಕನ್ನಡ)
ಗುಣವಿಲ್ಲದವನ ಕೈಲಿರುವ ಅತುಳವಾದ ಐಶ್ವರ್ಯವು ಕೊಳಕು ಪಾತ್ರಯಲ್ಲಿಟ್ಟು ಒಳ್ಲೆಯ ಹಾಲಿನಂತೆ ಶೀಘ್ರವೇ ಕೆಟ್ಟು ಹೋಗುತ್ತದೆ. (೧೦೦೦)

Sanskrit (संस्कृतम्)
निर्गुणेनार्जितं वित्तं नोपयोगकरं भवेत् ।
यथा स्यात् पात्रदोषेण पयो माधुर्यवर्जित: ॥ (१०००)


Sinhala (සිංහල)
අගුණවත් දද දැන - ලද යස ඉසුරු හැමෙකක් නරක මැටි කළයක - දැමූ හොඳ කිරිවලට සම වේ (𑇴)

Cina (汉语)
財富在粗郢人之手, 猶如淸乳見汚於不潔之器也. (一千)
程曦 (古臘箴言)


Korea (한국어)
불결한용기에담겨서더러워진순수한우유처럼무례한자의큰재산은쓸모가없다. (千)

Rusia (Русский)
Богатство в руках чуждого великодушия портится подобно молоку, налитому в немытый горшок

Arab (العَرَبِيَّة)
الثروة فى أيدى رجل غليظ القلب كمثل من يحفظ اللبن فى وعاء وسخة (١٠٠٠)


Perancis (Français)
La grande fortune que possède l'homme grossier est semblable au bon lait altéré par l'impureté du récipient qui le contient

Jerman (Deutsch)
Besitzen Unhöfliche großen Reichtum, ist das wie reine Milch, verdorben durch die Unreinheit des Gefäßes.

Sweden (Svenska)
Den rikedom som vinns av en ovärdig man surnar såsom god mjölk på grund av kärlets orenhet.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Amplissimae fortunae , quas obtinent male morati , hand secus ac vasis vitio bonum lac, mutabuntur. (M)

Poland (Polski)
Mleko w brudnym naczyniu natychmiast się zwarzy, Tak jak radość wśród ludzi ponurych.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பாலும் செல்வமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

பசுவின் பால் நல்லது. நன்மை அளிக்கக் கூடியது ஆகும். ஆனால், அந்தப் பாலை ஊற்றி வைத்திருக்கும் பாத்திரம் கெட்டதானால்- அதன் தன்மையால் பால் கெட்டுப் போகும். ஒருவருக்கும் பயன்படாது.

அதுபோல, பண்பு இல்லாதவனிடம் இருக்கின்ற பெரும் செல்வம் மக்களுக்கு உதவாமல், சில சமயங்களில் தீமையான காரியங்களுக்கு கூட பயன்படும். அதனால், மிகப்பெரிய செல்வமும் பயன் இல்லாமல் போய்விடுகிறது.

பண்பாடு உள்ளவனிடமுள்ள செல்வம் தான், செல்வம் என்ற பெருமை மிக்க சிறப்பை பெரும்.


பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Bab Terkenal

Petikan Terkenal

Perkataan ulangan dalam petikan
Perkataan ulangan paling banyak dalam Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Perkataan ulangan dalan permulaan petikan
Perkataan pertama paling lazim dalam petikan
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Perkataan ulangan dalan keakhiran petikan
Perkataan terakhir paling lazim dalam petikan
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22