Wunsch nach Vereinigung

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.   (௲௨௱௮௰௧ - 1281)
 

Zufrieden im Geist und erfreut durch den Blick zu sein, liegt nicht im Alkohol, sondern in der Liebe.

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.   (௲௨௱௮௰௨ - 1282)
 

Man soll nicht schmollen, nicht einmal in der Größe eines Hirsesamens, auch wenn die Liebe größer ist als eine Palmyranuß.

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.   (௲௨௱௮௰௩ - 1283)
 

Obwohl er mich verachtet und mit mir macht, was er will, zerbrechen meine Augen nicht, wenn sie meinen Mann nicht sehen.

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.   (௲௨௱௮௰௪ - 1284)
 

Ich ging und wollte schmollen, meine Freundin - aber mein Herz vergaß es, ging und umarmte ihn.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.   (௲௨௱௮௰௫ - 1285)
 

Wie man den Griffel beim Schreiben nicht sieht, sehe ich die Fehler nicht, wenn ich meinen Mann sehe.

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.   (௲௨௱௮௰௬ - 1286)
 

Sehe ich ihn, sehe ich keinen Fehler an ihm – sehe ich ihn nicht, finde ich nur Fehler.

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.   (௲௨௱௮௰௭ - 1287)
 

Was nützt das Schmollen, wenn man weiß, daß es nichts bringt - gleich denen, die in die Flut springen und doch wissen, daß sie sie wegreißt.

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.   (௲௨௱௮௰௮ - 1288)
 

Trickreicher, deine Brust ist wie Alkohol denen, die sich seiner erfreuen, obwohl er nur schändliche Dinge einbringt.

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.   (௲௨௱௮௰௯ - 1289)
 

Liebe ist zarter als eine Blume - es gibt nur wenige, die ihr Wesen in vollendeter Zeit gewinnen.

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தேசு  |  Tala: ஆதி
பல்லவி:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு - தோழி
கள்ளுக்கில் காமத்திற் குண்டு

அநுபல்லவி:
வெள்ளம் போல் புணர்ச்சி விதும்பலே நாடும்
வீணையும் நாதமுமாய் இழைந் தொன்று கூடும்

சரணம்:
பழுது பலவும் எண்ணி ஊடலாம் என்று சென்றேன்
பாங்கியே அதுமறந்து கூடலைத்தான் கண்டேன்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து நான் என்ன சொல்வேன்

போதுவாய் திறந்திடும் போதே பறந்து வரும்
பூம்பொறி வண்டினமும் அமர்ந்து தண்டேன் நுகரும்
ஈதுரை மலரினும் மெல்லிது காமம்
எனவே சிலர்தான் அதன் செல்வி தலைப்படுவார்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22