Schätzen von Angehörigen

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.   (௫௱௨௰௧ - 521)
 

Alie Liebe zu zeigen, auch wenn der Reichtum gegangen ist, ist nur eine Eigenschaft der Angehörigen.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.   (௫௱௨௰௩ - 523)
 

Das Leben dessen, der nicht herzlich mit seinen Verwandten verkehrt, ist wie Wassef, das in einen uferlosen Teich fließt.

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.   (௫௱௨௰௫ - 525)
 

Wer sich im Geben übt und angenehme Worte Spricht, ist von zahllosen Verwandten umgeben.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.   (௫௱௨௰௭ - 527)
 

Die Krähe versteckt ihre Nahrung nicht, sondern kräht und schluckt hinunter - Reichtum bleibt bei Leuten derselben Natur.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.   (௫௱௨௰௮ - 528)
 

Behandelt der König nitht alle gleich, sondern jeden nach seinem Rang - dann leben viele in seiner Nähe.

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.   (௫௱௨௰௯ - 529)
 

Die weggegangenen Verwandte» kummen wieder; sobald der Grund zur Differenz geschwunden ist.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.   (௫௱௩௰ - 530)
 

Lief einer grundlos weg und kehrt aus irgendeinem Grund wieder zurück - der König soll darüber nachdenken, ihm helfen und ihn aufnehmen.

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தேசிகதோடி  |  Tala: அடதாளம்
கண்ணிகள்:
குற்றம் இல்லாதது சுற்றம் தழாலது
உற்றதாம் முன்னே சோல - ஒரு
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

குறைவற்ற மழைபெய்தும் கரையற்ற குளமாயின்
நிறையுமா தண்ணீர் அங்கே - நல்ல
உரையாடி இனத்தோடு கலக்காத பேருக்கும்
உறையுமா செல்வம் இங்கே.

கரவாமல் காக்கையும் உறவோடு கலந்துண்ணும்
கருத்துடனே அழைக்கும் - இனம்
மறவாத பண்புள்ள செல்வர்க்கே ஆக்கமும்
மாநிலத்தில் தழைக்கும்

சினமற்ற இன்சொல்லும் கொடுத்தலுமாம் கொடைச்
செல்வம் திருக்குறளே - இதில்
மனம் வைத்துப் பார்க்காமல் மண்ணில் புதைப்பவர்
வாழும் இடம் இருளே.

பூத்துக் குலுங்கிடும் கிளைகளைத் தாங்கியே
பூமியில் நிற்கும் மரம் - செல்வர்
ஏத்தும் பொருளதும் இனநலம் சூழவே
என்பதைக் காட்டும் திரம்.




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22