Streben

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.   (௬௱௰௧ - 611)
 

Laß nichc locker: «Es ist zu schwer zu tun» - Streben gibt Größe.

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.   (௬௱௰௪ - 614)
 

Die Freigebigkeit eines, der nicht strebt, schlägt fehl wie die Tapferkeit eines Feiglings mit einem Schwert.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.   (௬௱௰௫ - 615)
 

Wer kerne Freuden begehrt, sondern arbeitet, ist seinen Freunden ein Halt, unterstützt sie und merzt ihre Leiden aus.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.   (௬௱௰௭ - 617)
 

Die Magd «Unheilvoll» lebt in Trägheit - die auf dem Lotus lebt im Vertreiben der Trägheit.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.   (௬௱௰௮ - 618)
 

Mangel an gutem Geschick ist für keinen eine Schande - nicht zu wissen, was man wissen sollte, und sich keine Mühe zu geben, das ist Schande.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.   (௬௱௰௯ - 619)
 

Wird auch etwas wegen des Schicksals nicht erfüllt - Streben bringt seine eigene Auszeichnung für körperliche Ansircngung.

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: அம்சாநந்தி  |  Tala: ஆதி
பல்லவி:
ஆள்வினை உடைமையே அயர்வில்லா முயற்சி - மக்கள்
அரசு விளங்க வரும் புதுமலர்ச்சி உலகில்

அநுபல்லவி:
வாள்வலி யோடுதம் தோள் வலியும் சிறக்கும்
வையகம் வாழ்வுறவே செய்யும் தொழில் நிறக்கும்

சரணம்:
உறங்கிடுவோன் முகத்தில் உறும் கரும் மூதேவி
உழைப்பவன் தாளினில் உறைவாள் சீதேவி
திறங்கொள்ளும் நன் முயற்சித் திருனைவியாக்கு மன்றோ
தேர்ந்த உழைப்பினைப் போல்சிறக்கும் பொருள் வேறுண்டோ

தாளாண்மை யுள்ளான் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை யென்னும் செருக்கதும் இங்குற்றே
கேளாரும் கேட்கவே குறள் முர சொலிக்கும்
கேளிர் துன்பம் துடைக்கும் தூணாகவும் நிலைக்கும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22