Redegewalt

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (௬௱௪௰௧ - 641)
 

Maeht in der Rede ist ein Besitz - dieser Besitz ist keinem anderen gleich.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.   (௬௱௪௰௨ - 642)
 

Hüte dich vor Fehlern m der Rede - denn beides, Gewinn und Verderben, kommt aus ihr.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.   (௬௱௪௰௩ - 643)
 

Die Rede ist wertvoll, wenn sie zuhörende Freunde bindet und auch Feinde sie schätzen.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.   (௬௱௪௰௪ - 644)
 

Sprich Worte und kenne die Natur der Welt - es gibt keine größere Tugend oder Reichtum.

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.   (௬௱௪௰௬ - 646)
 

Solche mit untadeliger Größe kennen den Inhalt der Rede anderer und sprechen so, wie es andere mögen.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.   (௬௱௪௰௭ - 647)
 

Es ist schwierig für einen Gegner, den zu besiegen, der mächtig, fehlerlos und furchtlos in seiner Rede ist.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.   (௬௱௪௰௮ - 648)
 

Die Welt nimmt bereitwillig die Worte dessen an, der eine zusammenhängende und angenehme Rede halren kann.

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.   (௬௱௪௰௯ - 649)
 

Wer aich nicht mit wenigen Worten klar auszudrücken weiß, macht gern viele Worte.

இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.   (௬௱௫௰ - 650)
 

Wer sein Gelerntes nicht verständlich zu erklären vermag, ist wie ein Blumengebinde ohne Duft.

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சண்முகப்பிரியா  |  Tala: ஆதி
பல்லவி:
சொல்வன்மை யளித்திடும் நா நலமே
சொல்லும் நலத்திற் கெல்லாம்
இது முதல் - வருமே

அநுபல்லவி:
வில் வேல் வாளாண்மை வீரரையும் கவரும்
சொல்வன்மை யாளர் தொழில்
சூழ்ந்தே கேட்கும் உலகம்

சரணம்:
ஆக்கமும் கேடும் அவரவர் சொல்லால் வரும்
அதனால் சோர்வு படாமல் சொல்லினைக் காத்திடும்
வாக்கின் தெளிவு பெற்றால் வாழ்வே மிக இனிதாம்
வழங்கும் சொல் வல்லவனை வெல்லல் யார்க்கும் அரிதாம்

"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்" லிதே பாராளும்
"வேட்பத்தாம் சொல்லிப் பிறர் சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்" எனும் குறள் பாடல்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22