О самообладании

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.   (௱௨௰௧ - 121)
 

Именно самообладание приводит тебя в мир небожителей,, необдуманный порыв швыряет в непроглядную тьму.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.   (௱௨௰௨ - 122)
 

Нет в жизни богатства большего, чем самообладание. Вот почему его следует рассматривать как сокровище.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.   (௱௨௰௩ - 123)
 

Если мудрый человек достигнет самообладания на пути доброчестия, он обретет славу и счастье.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.   (௱௨௰௪ - 124)
 

Величие человека, умеющего обуздать свои порывы, не сворачивающего со стези добра, вознесет его выше самых высоких гор.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.   (௱௨௰௫ - 125)
 

Дар довольствоваться малым украшает любого человека. Но более всего этот дар сияет в богачах .

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.   (௱௨௰௬ - 126)
 

Тот, кто в своей жизни умеет, подобно черепахе, упрятать в себе и подавить пять чувств, обретет блаженство и радость во всех своих семи рождениях.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.   (௱௨௰௭ - 127)
 

Если уж ты не в состоянии подавить какие-то чувства, то держи в узде хотя бы язык,,бо болтающий язык извергнет неразумные слова, в коих ты вскоре страшно раскаешься.

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.   (௱௨௰௮ - 128)
 

Все твои благие деяния разом исчезнут, если ты хоть раз породишь боль в другом человеке своим несдержанным словом.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.   (௱௨௰௯ - 129)
 

Рана, нанесенная огнем, вес равно затянется. Но не заживет боль, причиненная твоим языком другому человеку.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.   (௱௩௰ - 130)
 

Сам Бог Справедливости устремляется к дому человека, обладающего тайной самообладания и удерживающего свой ум от гнева.

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தோடி  |  Tala: ரூபகம்
பல்லவி:
நல்லடக்கம் நாளும் வேண்டுமே
நாடும் செல்வன் நீயென்றாலும்

அநுபல்லவி:
கல்வி அறிவு மிகுந்திட்டாலும்
கையில் பொருள்கள் குவிந்திட்டாலும்
செல்வத்தின் மேல் செல்வமாகச்
சிறக்கும் பண்பை மறக்கலாமா

சரணம்:
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்டவடு" என்று நம் குறள்
நேயமுடன் சொல்லும் நேர்மை வழியிர்செல்
நிலையில் திரியாத மலையென்னும் மான்புகொள்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22