Притворная обида

புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.   (௲௩௱௧ - 1301)
 

Не обнимай его при встрече, выскажи притворную обиду. И тогда увидим, как будет страдать он сам

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.   (௲௩௱௨ - 1302)
 

В любви притворная досада подобна соли в еде. Переборщить в досаде — это все равно, что пересолить пищу

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.   (௲௩௱௩ - 1303)
 

Не обнимать милую, которая притворно гневается на тебя — подобно тому,,то подвергать страданиям человека, который только что перенес их

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.   (௲௩௱௪ - 1304)
 

Не утешать притворно гневающуюся на тебя милую — это все равно, что вырывать с корнем немного увядший цветок

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து.   (௲௩௱௫ - 1305)
 

Наигранная обида любимой с глазами, подобными цветку, есть очарование для достойного мужчины

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.   (௲௩௱௬ - 1306)
 

Не будь наигранной обиды или разлуки, любовная страсть напоминала бы перезрелый или недозрелый плод

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.   (௲௩௱௭ - 1307)
 

Притворная досада порождает сплошную боль, ибо я не знаю, насколько затянется миг объятий

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி.   (௲௩௱௮ - 1308)
 

Какой толк от страданий, если не знаешь, что и милый страдает,,сли бы не было любимого, который знает о моих страданиях?

நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.   (௲௩௱௯ - 1309)
 

Даже вода дарит сладость лишь в тени. Так и наигранная обида сладостна влюбленным

ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா.   (௲௩௱௰ - 1310)
 

Лишь одна страсть заставляет меня шептать: я обниму ту, которая притворно обижается па меня

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஆரபி  |  Tala: ஆதி
பல்லவி:
புல்லாதிராப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்பம் சிறிது

அநுபல்லவி:
நல்லார்க்கிது நல்ல பாடம்
நாயகியாள் ஆட்சி பீடம்
வல்லாண்மையும் வளைந்து கொடுக்கும்
வாயிலில் கையேந்தி நிற்கும்

சரணம்:
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்றே அதுவாகும்
இனிதாகிய நீரும் நிழலும் போல்
இணைந்தவர் ஊடலே இங்கிதம் காண்பதால்

ஊடல் உணவில் சேர் உப்பினைப் போன்றது
உள்ள அளவினில் மீறிக் கூடாதது
நீடலாமோ தலைவி! ...... புலவி
நேரம் அறிந்து செல் சாரம் அறிந்துகொள்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22