О любви к родным и окружающим

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.   (௭௰௨ - 72) 

Кто не умеет любить, живет единственно для себя Любящий человек даже костьми принадлежит другим

Тамил (தமிழ்)
அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர் (௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் (௭௰௨)
— மு. வரதராசன்


அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர் (௭௰௨)
— சாலமன் பாப்பையா


அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர் (௭௰௨)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀷𑁆𑀧𑀺𑀮𑀸𑀭𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀢𑀫𑀓𑁆𑀓𑀼𑀭𑀺𑀬𑀭𑁆 𑀅𑀷𑁆𑀧𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆
𑀏𑁆𑀷𑁆𑀧𑀼𑀫𑁆 𑀉𑀭𑀺𑀬𑀭𑁆 𑀧𑀺𑀶𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁡𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar
Enpum Uriyar Pirarkku
— (Transliteration)


aṉpilār ellām tamakkuriyar aṉpuṭaiyār
eṉpum uriyar piṟarkku.
— (Transliteration)


The unloving belong only to themselves, But the loving belong to others to their very bones.

хинди (हिन्दी)
प्रेम-शून्य जन स्वार्थरत, साधें सब निज काम ।
प्रेमी अन्यों के लिये, त्यागें हड्डी-चाम ॥ (७२)


телугу (తెలుగు)
దయఁద్రలంచు నతఁడు తమవెల్ల వెచ్చించు
నదయు డన్ని తనకె యనుచు దలఁచు. (౭౨)


малаялам (മലയാളം)
ദയയില്ലാത്തവർ സർവം തങ്ങൾക്കെന്നു ധരിക്കയാം ദയയുള്ളോരെല്ലും കൂടെ പൊതുസ്വത്തായ് ഗണിച്ചിടും (൭൰൨)

каннада (ಕನ್ನಡ)
ಪ್ತೀತಿ ಇಲ್ಲದವರು ಎಲ್ಲಾ ತಮ್ಮದು ಎಂದು ತಿಳಿಯುವರು; ಪ್ರೀತಿಯುಳ್ಳವರು ತಮ್ಮ ಶರೀರವೂ (ಎಲುಬು) ಪರರಿಗಾಗಿದೆ ಎಂದು ತಿಳಿಯುವರು. (೭೨)

санскрит (संस्कृतम्)
नर: प्रेम्णा विरहित्: सर्वमात्मार्थमिच्छति ।
प्रेमवान् स्वशरीरं च परार्थमिति मन्यते ॥ (७२)


сингальский (සිංහල)
ආදරය නැත්තෝ - සැම දෙයම තම සතූ දේ සිතන මුත් අදරැති- දනන් ඇටකටු පවා අන් සතූ (𑇰𑇢)

китайский (汉语)
不愛人者爲一己而生存, 愛人者盡其生命以爲他人. (七十二)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Mereka yang tidak tahu chinta hidup untok diri-nya sahaja: bagi mereka yang berchinta akan di-korbankan hingga tulang puteh-nya sendiri untok menolong orang lain.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
사랑이 없는 사람은 이기적이지만 사랑이 있는 사람은 심지어 목숨을 걸고 봉사한다. (七十二)

арабский (العَرَبِيَّة)
الرجل الذى يخلو من المحبة يموت لنفسه فقط والذى قلبه مملوء بالمحبة يموت لغيره من الناس (٧٢)


французы (Français)
Tout ce que possèdent ceux qui n’aiment pas leur appartient ! chez ceux au contraire, qui aiment, tout appartient au prochain, jusqu’à leurs corps.

немецкий (Deutsch)
Lieblose besitzen alles für sich – Liebende überlassen selbst ihre Gebeine anderen.

шведский (Svenska)
De kärlekslösa begär allting för egen del. De som äger kärlek låter sig skrapas inpå bara benen för andras skull.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Amore vacui omnia possident sibi; amore pleni et ipsa ossa possi-dent ceteris. (LXXII)

польский (Polski)
Ten, co w kółko się kręci wokoło spraw swoich, Nie rozumie miłości do ludzi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22