O nikczemności

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.   (௲௭௰௩ - 1073) 

Ludzie podli są również podobni do bogów: Lekceważą opinię i prawo.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
தேவரைப் போலவே, தம்மை நியமிப்பவர் இல்லாமல், தாம் விரும்புவன செய்து ஒழுகுதலால், கயவரும் தேவரும் ஒரே தன்மையுடையவர் ஆவர் (௲௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர். (௲௭௰௩)
— மு. வரதராசன்


தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர். (௲௭௰௩)
— சாலமன் பாப்பையா


புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம் (௲௭௰௩)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁂𑀯𑀭𑁆 𑀅𑀷𑁃𑀬𑀭𑁆 𑀓𑀬𑀯𑀭𑁆 𑀅𑀯𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀫𑁆
𑀫𑁂𑀯𑀷 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀓 𑀮𑀸𑀷𑁆 (𑁥𑁡𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Thevar Anaiyar Kayavar Avarundhaam
Mevana Seydhozhuka Laan
— (Transliteration)


tēvar aṉaiyar kayavar avaruntām
mēvaṉa ceytoḻuka lāṉ.
— (Transliteration)


The base are like the gods. They also do whatever they like.

Hindi (हिन्दी)
नीच लोग हैं देव सम, क्योंकि निरंकुश जीव ।
वे भी करते आचरण, मनमानी बिन सींव ॥ (१०७३)


Telugu (తెలుగు)
అల్పు లమరు లగుదు రది యెట్టు లన్నచో
తలచినట్లు జేయగలరు గాన. (౧౦౭౩)


Malajalam (മലയാളം)
ദുഷ്ടരാമധമർ പാർത്താൽ ദേവന്മാർക്ക് സമാനമാം തോന്നും കർമ്മങ്ങൾ ചെയ്തിട്ടും തോന്നും പോലെ നടക്കലാം (൲൭൰൩)

Kannada (ಕನ್ನಡ)
ಕೀಳು ಜನರು ದೇವರ ಸಮಾನರು! ಏಕೆಂದರೆ, ಅವರೂ ಕೂಡ ದೇವರಂತೆ ತಾವು ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಇಷ್ಟಪಟ್ಟಂತೆ ನಡೆದುಕೊಳ್ಳುತ್ತಾರೆ! (೧೦೭೩)

Sanskryt (संस्कृतम्)
लोके नीचस्तथा श्रीश इतीमै भवत: समौ ।
स्वेच्छया वाञ्छितं कार्यमुभाभ्यां क्रियते यत: ॥ (१०७३)


Syngaleski (සිංහල)
නීචයෝ තැනකදී - දෙවියන් අබි බැවූයේ හිත කැමති හැම දැය - නිතර කර හැසිරෙන නිසාවෙනි (𑇴𑇰𑇣)

Chiński (汉语)
卑鄙之人, 有同於神者, 卽不知有世間之法也. (一千七十三)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Saperti Dewa2-lah mereka yang keji di-dunia ini! Kerana mereka juga dapat bertindak mengikut dorongan dan khayalan-nya sendiri.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
천한자는너무자유의사와쾌락에따라서만행동하기때문에, 신과닮았다. (千七十三)

Rosyjski (Русский)
Низменные Люди похожи на богов, ибо они поступают в соответствии со своими помыслами

Arabski (العَرَبِيَّة)
الأرذال يعيشون على الارض كمثل الآلهة فانهم يحسبون أنفسهم قادرين على نفاذ القانون (١٠٧٣)


Francuski (Français)
Les vils sont comme les dieux: les uns et les autres font ce qu'ils veulent, parce qu'il n'y a personne pour les réprimander.

Niemiecki (Deutsch)
Die Niedrigen sind wie die Himmlischen – sie handeln auch, wie es ihnen gefällt.

Szwedzki (Svenska)
De onda liknar gudarna. Ty också de gör ju vad som faller dem in.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Diis similes sunt homines viles; quia etiam illi, quae concupi- scunt, statim efficiunt. (MLXXIII)

தேவரும் கயவரும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

தேவர்கள் ஆற்றலும், அருளும் நிறைந்தவர்கள். எப்படிப்பட்ட காரியத்தையும் சாதிக்க கூடிய வல்லமை உடையவர்கள், சுதந்திரமானவர்கள், எவரையும் லட்சியம் செய்யமாட்டார்கள். நினைத்ததை அவர்களால் செய்ய முடியும். மக்களின் நன்மையை கருதி, நல்லதை செய்யும் எண்ணம் கொண்டவர்கள்.

ஆகையால், கயவர்களும் தாங்கள் விரும்பியதை செய்யக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் விருப்பத்தின் விளைவு என்ன ஆகும், என்று சிந்திப்பதற்கான அறிவு, அவர்களிடம் இல்லை.

அதனால், மிருகத்தைப் போல கட்டுப்பாடில்லாத நெறி முறையற்ற வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள். இன்பம் ஒன்றையே பெரிதாக கருத கூடியவர்கள். பொறுப்பும், கவலையும் இல்லாதவர்கள். பொது வாழ்க்கைக்கு இடையூறு செய்பவர்கள்.

தேவர்களும் மேம்பட்டவர் என்று புகழ்வது போல், பழித்துக் கூறிய வஞ்சப் புகழ்ச்சி அணியின் சிறப்பு இதில் உள்ளது.

தேவர் என்பவர், மேன்மையானவர்.


தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22