O wyborze ambasadora

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.   (௬௱௮௰௫ - 685) 

Dobry poseł przemawia łagodnie, a zwarcie, Mówiąc rzeczy bolesne - nie rani.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
விரிக்காமல் தொகுத்துச் சொல்லியும், இன்னாச் சொற்களை நீக்கியும், கேட்கும் மாற்றார் மகிழுமாறு சுவைபடச் சொல்லியும், தன் நாட்டிற்கு நன்மை விளைவிப்பவனே தூதன் (௬௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன். (௬௱௮௰௫)
— மு. வரதராசன்


அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும். (௬௱௮௰௫)
— சாலமன் பாப்பையா


சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும் (௬௱௮௰௫)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁄𑁆𑀓𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀢𑁆 𑀢𑀽𑀯𑀸𑀢 𑀦𑀻𑀓𑁆𑀓𑀺 𑀦𑀓𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺
𑀦𑀷𑁆𑀶𑀺 𑀧𑀬𑀧𑁆𑀧𑀢𑀸𑀦𑁆 𑀢𑀽𑀢𑀼 (𑁗𑁤𑁢𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Thokach Chollith Thoovaadha Neekki
NakachcholliNandri Payappadhaan Thoodhu
— (Transliteration)


tokaccollit tūvāta nīkki nakaccolli
naṉṟi payappatān tūtu.
— (Transliteration)


An envoy's words should be compact, Unoffending, pleasant and useful.

Hindi (हिन्दी)
पुरुष वचन को त्याग कर, करे समन्वित बात ।
लाभ करे प्रिय बोल कर, वही दूत है ज्ञात ॥ (६८५)


Telugu (తెలుగు)
ప్రియపడంగ జెప్పి వెగటును తప్పించి
నయము గూర్చు నతఁడె స్వయము దూత. (౬౮౫)


Malajalam (മലയാളം)
കാര്യപ്രസക്തമാം വണ്ണമനിഷ്ടധ്വനിയെന്നിയേ മധുരഭാഷണത്താലേ ദൂതൻ ലക്ഷ്യങ്ങൾ നേടണം (൬൱൮൰൫)

Kannada (ಕನ್ನಡ)
ಹೊರನಾಡಿನ ಅರಸರಿಗೆ ಹೇಳುವುದನ್ನು ಸಂಗ್ರಹವಾಗಿ, ಅಹಿತವಾದ ವಿಷಯಗಳನ್ನು ಬಿಟ್ಟು, ನಗೆಸೂಸುವಂತೆ ಹೇಳಿ ತನ್ನರಸನಿಗೆ ಒಳ್ಳೆಯದಾಗುವಂತೆ ಮಾಡುವವನೇ ದೂತನೆನಿಸಿಕೊಳ್ಳುವನು. (೬೮೫)

Sanskryt (संस्कृतम्)
ग्रथयित्वा बहून् शब्दानपशब्दानपोह्य च ।
पत्युएमनोऽनुकूलं यो वक्ति दूत: स कथ्यते ॥ (६८५)


Syngaleski (සිංහල)
වළකා අපිය බස් - කෙටියෙන් වදන් තෙපලා සතොස් කර නිසි පල - ලබන්නේ දුතයා නම් වේ (𑇦𑇳𑇱𑇥)

Chiński (汉语)
賢頁之使臣, 出言溫馴而有耐性; 卽使駁辯, 亦不以鹵莽出之. (六百八十五)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Kejituan uchapan, kemanisan lidah, dan menjauhi segala bahasa yang tidak menyenangkan, ini-lah alat2 duta untok memenangi menefa‘at bagi raja-nya.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
좋은외교사절은왕에게이득을가져올수있도록정확하게, 유쾌하게, 겸손하게말해야한다. (六百八十五)

Rosyjski (Русский)
Талантливый посланник обычно краток в речах, не говорит резких слов,,е избегает шуток. Используя все это, он добивается нужной цели

Arabski (العَرَبِيَّة)
الكلام الجامع وعذبة اللسان واتنحى عن الكلمات الشائنة هي التى تمكن السفير من إيصال النفع والفائدة لمولاه (٦٨٥)


Francuski (Français)
Exposer habilement l'objet de sa mission, éviter les paroles dures en traitant les sujets délicats, captiver l'interlocuteur, se le rendre propice et ainsi rendre service à son Roi, c'est le propre de l'ambassadeur.

Niemiecki (Deutsch)
Zustimmend sprechen, harte Worte vermeiden und erfreulich sein im Benehmen - darin bringt ein Gesandter Gutes hervor.

Szwedzki (Svenska)
Framgång får det sändebud som vet att tala kort, utan hårdhet och med humor.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Brevitcr loqueutem, sermonem odiosum evitantem, gratis utentem verbis, (regi) emolumeutum comparare, baec legatio est. (DCLXXXV)

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22